இன்று பாடத்திட்டங்கள் பற்றியும், பொதுத்தேர்வு வினா மதிப்பெண்கள் பற்றியும் பார்ப்போம்
icse class10 தமிழ் பகுதியை பொருத்தவரை பகுதியில் நமக்கு நான்கு சாய்ஸ் இருக்கு..
1.சரித்திர சம்பவங்கள்
2.மல்லன் மாறப்பன்
3.ராஜ ராஜ சோழன்
4.வீர பாண்டிய கட்டபொம்மன்
என்னை பொருத்தவரை இதில் ஏதாவது மூன்று பகுதி நல்லா படிச்சுட்டாலே போதும். 90 பெர்செண்ட் க்கு மேலே வாங்கிடலாம்..
என் சாய்ஸ் ஆ இருந்தது, ரெண்டே ரெண்டு தான்...சரித்திர சம்பவங்கள் , வீர பாண்டிய கட்டபொம்மன்.
சரித்திர சம்பவங்கள் பகுதியை பொருத்தவரை கதைகளின் எண்ணிக்கை குறைவு...எளிதான பகுதிகளும் கூட....பொது தேர்வுகளில் கேட்ட வினாக்கள் அடிக்கடி ரிப்பீட் ஆவதும் இப்பகுதியை பொருத்தவரை மிகவும் வசதி...அதனால் நான் சரித்திர சம்பவங்கள் பகுதியை தேர்வு செய்தேன்..இதில் மொத்தமே 6 சிறுகதைகள் தான்...அதை திரும்ப திரும்ப படித்தாலே போதும்...அதில் இருந்து கட்டாயமாக ஏதேனும் ரெண்டு கேள்விகள் வரும்...
நான் மல்லன் மாறப்பன் பகுதியை கதை தெரிந்து கொள்ள மட்டுமே படித்தேன். தவிர அதில் நிறைய பகுதிகள்,கேரக்டர்ஸ், வழவழா நிகழ்வுகள்...ஸோ , அதை தெரிவு செய்ய வில்லை.இந்த பகுதியில் இருந்து ஒரு கேள்வி வரும்...பெரும்பாலும் அதை எழுதுவதை தவிர்த்து விடுவேன்.
அடுத்து ராஜ ராஜ சோழன்..
என் பள்ளியில் இதை ஜஸ்ட் மாணவர்கள் தெரிந்து கொள்ளட்டும் என்று தான் சொல்லி கொடுத்தாங்க...அதையும் தவிர்த்து, இலக்கியத்தனமான வரிகள், பாடல்கள், தூயதமிழ் கதா பாத்திரங்கள் என்று நமக்கு தமிழ் ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் வரும் அபாயம் அதிகம் இருப்பதால் இதையும் நான் தெரிவு செய்ய வில்லை.
இதில் இருந்து மூன்று வினாக்கள் வரும்..இந்த புத்தகம் படித்து முடித்தபின் இதை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் கூட பார்த்தேன்...அதன் லிங்க் பிறிதொரு பதிவில் தருகிறேன்.
இதில் இருந்து மூன்று வினாக்கள் வரும்..இந்த புத்தகம் படித்து முடித்தபின் இதை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் கூட பார்த்தேன்...அதன் லிங்க் பிறிதொரு பதிவில் தருகிறேன்.
வீர பாண்டிய கட்டபொம்மன் :-
என் விருப்ப தேர்வு இது..மிகவும் எளிதான தமிழ், மிகவும் அறிமுகமான கதாபாத்திரங்கள்..எளிதான நடை..இதில் இருந்து மூன்று வினாக்கள் வரும்..இந்த புத்தகம் படித்து முடித்தபின் இதை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் கூட பார்த்தேன்...அதன் லிங்க் பிறிதொரு பதிவில் தருகிறேன்.
மொத்தத்தில், 40 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். 3 பகுதிகள் கொடுக்கப்படும்..
ஒவ்வொரு பகுதியிலும் மூன்று வினாக்கள்...ஒவ்வொரு வினாவிலும் 4 கேள்விகள் .
கட்டாயமாக ஏதாவது ரெண்டு பகுதியினை செலக்ட் செய்ய வேண்டும்..மீதி ரெண்டு நமது விருப்ப தேர்வு தான்...ஒவ்வொரு பகுதிக்கும் 10 மதிப்பெண்கள்.
Anyway , i hope it will be useful to you...:-)
Meet you in next post...